கொங்கை ..

போதுமென்று சொன்ன பின்,
அம்மா வார்க்கும் கடைசி தோசை போல்.
வேறெதுவும் தோன்றவில்லை,
இப்போதெனக்கு. ...

(11-04-2017)

உன் வரி இதழ் பார்க்கையில் எனக்கிப்படி
இல்லையேயென சிறு வருத்தம் உண்டெனக்கு..
நீ இறைவி தானே..
உன் இதழ் வரிகள் என்  இதழ்களில் படியும் வரை  ..
உன் இதழ்களால் கொஞ்சம் அழுத்தம் கொடு..
என்னுயிரே..

(10.04.2017)
அழகிய எண்ணிலடங்கா வரிகள் உள்ளன...
உன் செஞ்சிவப்பு உதட்டினில்...
அவற்றினை எண்ணி சொல்லும் பணியினை கொடு
என் நாவிற்கு..
தினம் ஒரு மணி என முயற்சித்தாவது எண்ணி சொல்கிறேன்
என்   ஆயுளுக்குள் ..
என்னுயிரே ..

(09.07.2017)
உன் கண்ணின் கீழ் சிறு கருவளையம் உண்டு உனக்கு..
அது சிறு இறை பிழையோ என்றெண்ணி இருந்தேன் இதுவரை..
உன் கண்ணின் அழகினை கண்டுணர்ந்த பின்,
தெரிந்து கொண்டேன்,
அது உன் கண்ணின் அழகை இரசித்த
இறைவன் கண்ணிற்கென வைத்த திருஷ்டி மையென்று..
என்னுயிரே ...

(08.4.2017)
இத்தனை இனிமை  கொண்ட உன் இதழ்களை
சுவைக்கையில்  சிந்தித்தேன் ..
தேனீக்கள் எப்படி விட்டு வைத்தன
இத்தனை நாள் உன் இதழ்களை..??
என்னுயிரே..

(07.04.2017)
உன் கண்ணழகை இரசித்ததில்
கொஞ்சம் உறைந்து போனேன்..
என் கரம் கோர்த்து
உன் உள்ளங்கை வெப்பம் தந்து
என்னை கொஞ்சம் உருக செய்..
என்னுயிரே..

(06.04.2017)